இரவும் பகலும் சந்திக்கிற நேரத்திற்கு உஷாக்காலம் என்று பெயர். மாலை வேளையில் அதிதேவதை சூரியன் மணைவியாகிய உஷா என்பவளாவாள். இவர் பெயரிலேயே உஷாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஹத்காலம் எனப்படும் சூரியனின் இன்னொரு மணைவியாகிய பிரத்யுஷா இக்காலத்தின் அதிதேவதை அவரது பெயரிலேயே பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷம் என அழைக்கபடுகிறது. பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது எனப்பொருள். எனவே இந்த பொழுதில் வழிபட்டால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள்ளாக அமையும் காலமே பிரதோஷ காலமாகும். திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சிற்ப்புடையதாகும். இதனை சோமவார பிரதோஷம் என்று பெயர். சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமான் விஷமுண்டு சயனித்து எழுந்து சனிக்கிழமை மாலை வேளையில் தான் சந்திய தாண்டவம் ஆடினார் என்பதால் சனிபிரதோஷம் மிகவும் சிறப்புக்குறியது. வளர் பிறை தேய்பிறை திரியோதசி நாட்களில் வரும் பிரதோஷதிற்கு பட்ச பிரதோஷம் என்றும் மகாசிவராத்திரிக்கு முன்தினம் வருகின்ற பிரதோஷத்தை மகாபிரதோஷம் என்றுபெயர். மகாசிவராத்திரிக்கு முன்பு வரும் பிரதோஷம் சனிக்கிழமை வருமாயின் அது சனிமகாபிரதோஷம் எனப்படும். இது ஆயிரம் மடங்கு பலனை தரும்.
பிரதோஷவேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியே தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமான் நந்தியம் பெருமானை காண சந்தியா தாண்டவம் ஆடினார். அதனை கண்ட நந்தியம் பெருமான் உடல் பெருத்தார். அதனால் கைலாயமே மறைந்தது. இறைவன் ஆடிய நடன காட்சியை அதன் இரு கொம்புகளிடையே மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைவுகூறும் வகையில் இறைவனை நந்தியம் பெருமானின் இருகொம்புகளிடையே மட்டும் தான் தரிசிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானை வணங்கினால் மட்டுமே பிரதோஷ பூசையின் பலன் கிடைக்கும்.